Thursday, August 28, 2008

முத்தமிழே மூச்சாக...தொடங்குகிறது மூன்றாமாண்டு!


அழைக்கிறோம் அன்புடன்...
உங்கள் அனைவரையும் வரும் செப். 6-ஆம் நாள் (சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு மதுரை இராசா முத்தையா மன்றத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவிற்கு (முத்தமிழ் விழாவாக கொண்டாடுகிறோம்!) அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி,
மக்கள் குழாம்.

10 comments:

Anonymous said...

Hello liked from your blog ...

shanu said...

Makkal TV is the first ever channel to spread tamil anywhere. the programmes are very good and useful. I have learnt meaning for many tamil words through makkal tv.

siva said...

all the best....

my hearty congradulations...

மு.சீனிவாசன் said...

மக்கள் தொலைக்காட்சிக்கு மூன்றாம் ஆண்டு பிற‌ந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Mu.Sampath said...

மக்கள் தொலைக்காட்சிக்கு எனது நல்வாழ்த்துகள்!
மக்கள் தொலைக்காட்சியின் அடையாளப் பாடலான இசையை, கைபேசியின் ரிங் டோன் எனப்படும் அழை ஓசை அல்லது அழை ஒலியாக பயன்படுத்த இந்த வலைப்பூ மூலம் வாய்ப்பு கிட்டுமானால் மக்கள் தொலைக்காட்சியின் பார்வையாளர்களான சிறியவர் முதல் முதியோர் வரை மகிழ்வார்கள்.
முத்தான மூன்றாம் ஆண்டில் மக்கள் பரிசாக இலவசமாகவோ அல்லது பணப்பரிமாற்றத்தின் அடிப்படையிலோ அழைஒலியை ஏற்ப்பாடு செய்து மக்களை மகிழ்விப்பீர்கள் என நம்புகிறேன்.

மக்கள் தொலைக்காட்சியின் வெற்றியை கொண்டாடும் இவ்வேளையில் இதைவிட இன்னும் சிறப்புற நிகழ்ச்சிகள் அமைய முயற்சிக்கவும். டிஸ்கவரி சேனல், ஹிஸ்டரி சேனல், அனிமல் பிளானெட் போன்ற உலகின் சிறந்த தொலைக்காட்சிகளுடன் இணைந்து செயல்படும் உரிமம் பெற்று மேலும் பல பயனுள்ள நல்ல தொலைக்காட்சிகளை உருவாக்கி தமிழுக்கும்,தமிழ் பார்வையாளர்களுக்கு பெருமை சேர்க்க அய்யா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்-மு.சம்பத்,நெய்வேலி.

தமிழ்த் தோட்டம் said...

தமிழிற்கினிய மக்கள் தொலைக்காட்சி குழுமத்திற்கு,
வணக்கம்.
தாங்கள் "மக்கள் வணக்கம்" வலைப்பூ, பல்வேறு தமிழ்,தமிழம்,தமிழ்ப்பண்பாடு,தமிழ் கலை,தமிழ் இனம்,மண் சார்ந்த தகவல்களை தரவேண்டும் என்று வேண்டுகிறோம்.
www.makkal.tv வலைத்தளத்தில் அவ்வகையான தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.ஆனால்,காண கிடைக்கவில்லை. எம்மைப்போன்ற பகல்பொழுதை கணினியில் கழிக்கும் தமிழ்ஆர்வலர்களுக்காக மின்னுலகிற்கு மக்கள் தொலைக்காட்சி பயணிக்க வேண்டுகிறேன்.

அன்பன் வெ.யுவராசன்.

தமிழ் அகராதி said...

மக்கள் தொலைக்காட்கியில் சில தமிழ் சொற்கள் பயன்படுத்தாமல் ஆங்கிலச் சொற்களே பயனாகின்றன:

மஞ்சள் முள்ளங்கி - கேரட்
பூக்கோசு - காலிபிளவர்
அரத்திப்பழம் - ஆப்பிள்
செங்கிழங்கு - பீட்ரூட்
வான்குடை - பாரசூட்
நகுதிறம் - காமிக்ஸ்

கீழ்க்கண்டவற்றுக்கெல்லாம் வேறு சொற்கள் பயனாகின்றன:
கூடுந்து க்கு பதிலாக மூடுந்து
சீருந்து க்கு பதிலாக மகிழுந்து (car)

தமிழ் கிழமைகள்:
அறிவன்கிழமை க்கு பதிலாக புதன்கிழமை

தமிழ் மாதங்களின் பெயர்கள் பயனாகுவதில்லை.

சித்திரை, வைகாசி போன்ற பெயர்கள் ஸமஸ்கிரத மொழி பெயர்கள்.

முறையான தமிழ் சொற்கள் பயன்படுத்தினால் நன்று.

ராஜ்
தொழில்நுட்பம் இணையம்
www.thozhilnutpam.com

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கரிகாலன் said...

மக்கள் தொலைக்காட்சி வலைப்பூவும் மக்கள் தொலைக்காட்சியின் இணையதளமும் நாள்தோறும் புதுப்பிக்க வேண்டுகிறோம்.

baby said...

நண்பர்களே தமிழில் தட்டச்சு செய்ய எளிதான வழி கொடுக்கப்பட்டிருக்கும் தொடர்பை க்ளிக் செய்யுங்கள்

http://ezilnila.com/tane/unicode_Writer.htm