Sunday, September 14, 2008

மணிச்செய்திகள் - ஆகஸ்ட் 22 முதல் ...,


நமது மக்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும் 8 முறை செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றன . இதில் , இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் செய்தி தொகுப்பில் , அன்றைய தினம் உலகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன . மக்கள் தொலைக்காட்சி மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைத்ததையொட்டி, வரும் 22 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் "மணிச்செய்திகள் " தொடங்கப்படவிருக்கிறது . இதன்படி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை முதன்மையான செய்திகள் ஒளிபரப்பாகும் .

இதில் உள்ளூர் முதல் உலகின் கடைகோடி நாடுகள் வரை அவ்வப்போது நிகழ்ந்த செய்திகள் இடம்பெற்று இருக்கும் . அரசியல் , விளையாட்டு , அறிவியல் , சாதனைகள் , அன்றாட நிகழ்வுகள் என இதில் அனைத்து அணிவகுத்து வரும் .

24 மணி நேர செய்தி தொலைக்காட்சி செய்யும் பணியை , மக்கள் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு , மணிச் செய்திகள் மூலம் மேற்கொள்ள
இருக்கிறது .

மற்றவர்கள் யோசிக்கத் தயங்கும் முக்கிய செய்திகளையும் , அதன் பின்னணியையும் துணிச்சலோடு , உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வரும்
மக்கள் தொலைக்காட்சி , மணிச் செய்திகளிலும் சிறப்பான முத்திரையைப் பதிக்கும் .

3 comments:

adhan said...

maniseythikal mikavum payanullathaka irrukkirathu.

சோழன் said...

seeria muyarchi , vetri adiya vazhthugal

shanmuga sundaram said...

If public face the problem means they will move to the police and lawyer, but the situation prevailing is that the conflict between police and lawyer inside the high court itself. So the TAMIL NADU’S fate becomes…….?????????????????????????????????

So please dismiss the party and keep the election immediate…

By
Shanmuga Sundaram
Coimbatore.