Friday, February 20, 2009

காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதல்


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று வழக்குரைஞர்களை ஓட ஓட விரட்டி காவல்துறையினர் தாக்கினர். இந்நிகழ்வை மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சேதுராமன் , ஜோதிமணி ஆகியோர் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் . செய்தியாளர்கள் என்று அடையாள அட்டையை காண்பித்த பிறகும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த செய்தியாளர்கள் இருவரும் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர் .

காவல் துறையினரின் இந்த வெறித்தாக்குதலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மக்கள் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு கருவிகள் அடித்து நொறுக்கப்பட்டன . ஒளிப்பதிவாளர்கள் மீதும் கண்முடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது . மேலும் காவல்துறையினரின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்குரைஞர்களும் படுகாயம் அடைந்தனர் .

8 comments:

lvnglover said...

yesterday i saw the policy attack on tamil lawers at chennai high court. In my point of view, this is the chain of activity next to your channel banned at srilanka. definitly this is hands of our useless and trustless and cunning chief minister and blood thirsty sonia ghandi's collective work because no other reporters from sun, jaya, and other channels attacked only makkal tv. reporters were attaked.

I am a ordinary tamil person, person like me very much confused on these parties particularly dmk, admk & congress.
Pls take any one of the following actions.

Pls form separte group which include pmk, mdmk,communist and other like minded parties and participated in election. we will vote for u. other wise we will not in a position to vote.

My inner feeling is above things will be in most of the tamil people in tamil nadu.

இதயம் said...

என்ன நடக்கிறது தமிழ் நாட்டில்..? நீதியை அளிக்கப்போகிறவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை அந்த வன்முறையை கைகட்டி வேடிக்கை பார்த்த அவலத்தையும் ஏற்கனவே சட்டக்கல்லூரி விவகாரத்தில் அனைவரும் அறிந்து தமிழகமே அவமானத்தில் தலைகுனிந்தது. அதன் இரணம் ஆறுவதற்குள் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் காவல்துறையும், நீதித்துறையும் நாலாந்தர ரவுடிகளைப்போல் அடித்துக்கொண்டதை கண்டு மக்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். அடிப்படையில் எங்கு தவறு..? தனி மனித ஒழுக்கத்திலா..? கற்பித்த கல்வித்துறையிலா..? அனுபவங்களை ஏற்படுத்திய சமூக அமைப்பிலா..? அரசின் சட்டதிட்டங்களிலா..? இல்லையென்றால் இவை எல்லாவற்றிலுமா..? எது எப்படியோ, ஆக மொத்தத்தில் மக்களுக்கு நீதித்துறையின் மேலும், காவல்துறையின் மேலும் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கை கரைந்து கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின்மை மக்களை பயங்கரவாதம், தீவிரவாதம் பக்கம் கொண்டு சென்றுவிடும் பெரும் அபாயம் இருக்கிறது.

நீதியும், காவலும் கை கோர்த்து ஆட்சி புரிந்தால் தான் நிம்மதி நிலைநாட்டப்படும் என்ற நிலையில் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் நின்று மல்லுக்கு நின்ற காட்சி கண்டு ஒரு மனிதனாய், தமிழனாய், இந்தியனாய் வெட்கித்தலை குனிகின்றேன். பாமர மக்கள் பண, பதவி அதிகார வர்க்கங்களால் சூழ்ச்சிக்கிரையாக்கப்படும் பொழுது முன்னின்று தடுக்க வேண்டிய நீதியாளர்களான வழக்கறிஞர்கள் ஒரு பொறுப்பற்ற, அறிவற்ற குடிமகனைப்போல் கல்வீச்சில், தாக்குதல்களில் ஈடுபட்டதும், யார் மேலோ உள்ள கோபத்தில் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அமைப்பையும், அதன் சொத்துக்களையும் சூறையாடியது கேவலத்திலும் கேவலம். அவர்கள் உண்மையிலேயே நீதியின் மேல் சிறிதளவேணும் நம்பிக்கை கொண்டவர்கள் என்றால் கருப்புடையை அணிவதற்கு முன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீதியின் இலட்சணம் இவ்வளவு என்றால் காவல் துறையோ காவாலிகளையும் மிஞ்சிவிட்டது. சமூகத்தில் கலவரம், வன்முறை ஏற்பட்டால் அதை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை வன்முறையை முன்னின்று நடத்தியது சமூக அரங்கில் தமிழகத்திற்கு ஏற்பட்ட பெரும் அவமானம். வன்முறைக்கு வன்முறை தான் தீர்வென்றால் பிறகு சட்டம் எதற்கு..? காவல் துறை, நீதித்துறை எதற்கு..? ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை வேட்டையாட அனுப்ப மக்களின் வரிப்பணத்தின் சொத்துக்கள் தான் இலக்காக வேண்டுமா..? வன்முறை எதற்கும் தீர்வாக முடியாது. இன்னும் சொல்லப்போனால் வன்முறை தான் எல்லா கலவரங்களுக்கும், அழிவிற்கும் அடிப்படையாய் அமைகிறது.

பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் இந்த கலவரத்தில் பெரும் அடி விழுந்திருக்கிறது. இவன் தான் குற்றவாளி என்று சொல்ல முடியாத அளவுக்கு சீருடை அணிந்த காவலர்கள்(?!!) தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். மக்களுக்காக தன் இன்னுயிரை நீத்த பெருமை மிக்க அதிகாரிகளும் இருந்த, இருக்கும் காவல் துறையில் இது போன்றவர்களால் அந்த துறையின் மதிப்பே அழிகிறது. போகிற போக்கில் எதிர்ப்படுபவர்களையும், வாகனங்களையும் மிருகத்தனமாய் சேதப்படுத்தும் காவலர்கள் அவர்களால் சேதப்பட்டது மனிதர்களோ, வாகனங்களோ இல்லை, தமிழகத்தின் மானம் தான் என்பதை அறிவார்களா..? இவர்களால் ஏற்பட்ட தலைகுனிவை காவல் துறை என்ன செய்து நிமிர்த்த போகிறது..??

சரி, இந்த கலவரம் அடிப்படையில் எதற்காக என்று அறிந்தோமானால் அதை விட கேவலம் வேறு ஏதுமில்லை. தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காய்வதை மட்டுமே காலங்காலமாய் செய்து வரும் சுப்பிரமணிய சாமி என்ற உப்புமா அரசியல்வா(வியா)தியால் தான் இத்தனை கலவரம், அவமானம், நாசம் எல்லாம். மக்கள் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லாத இந்த அரைவேக்காட்டை கண்டித்து வழக்கறிஞர்கள் அழுகிய முட்டையால் தாக்கப்போக (அன்று முட்டைகள் வீணாய் போனது என்பது என் கருத்து) அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய காவல் துறையினர் வந்ததால் ஏற்பட்ட பிரச்சினை தான் இதற்கு ஆணிவேர். ஜனநாயகத்தில் எதிர்ப்பு, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை புதிதல்ல. ஆனால் அவற்றுக்கு பெருமைப்படும் வகையிலான காரணம் ஒன்றேனும் அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் இந்த கலவரத்திற்கு அடிப்படையாக வெறும் இனவாத, மதவாத அரசியல் செய்து பிழைத்து வரும் அற்ப சு.சாமிக்காக என்பது பெருத்த அவமானம். இந்தியாவின் தெளிவு, நேர்மையற்ற அரசியலமைப்புச்சட்டம், சுயநல அரசியல் வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள், ஜாதி, மதம், இன வேற்றுமைகளால் சிதறிக்கிடக்கும் குடிமக்கள் உள்ளிட்ட அனைவருமே நடந்த இந்த கரும்புள்ளிக்கு காரணங்கள்..!!!!

ELAVARASU said...

இந்நிகழ்வு சொல்வது யாதெனில் சில ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு மற்றும் ஒரு ஈழம் பிறக்கும் என்றே காட்டுகிறது அதற்கு அடிகோடிட்டவர் கலைஞர் மு.கருணாநிதி ... ஈழ பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக இங்கு வேறு பிரச்சனையில் மக்களையும் ஊடகத்தையும் திசை திருப்பி விட்டு பின்னர் ஆட்சி கவிழ சதி அது இது என்று குமுறுகிறார் இந்த கிழவர் இளையோருக்கு வழிவிட வேண்டிய இவர் இன்னும் பதவி ஆசை பிடித்து அலையும் ஒரு ஓநாய் கூட்ட தலைவன். அரசியல் மட்டுமே தெரிந்த இந்த கிழவன் அரசியலுக்குன்டான அறவழியை மறந்தது ஏன், கண்டிக்க வேண்டியது.. கடும் சொல் சொல்ல மனம் இல்லை தமிழின் தமிழரின் அழிவிற்கு இவரே காரணம்

இது நாள்வரை
ஐந்து முறை முதல்வராய் வந்துள்ளார் இருப்பினும் தமிழுக்கும் தமிழர்க்கும் செய்து கிழித்ததுதான் என்ன ?
சகோதர யுத்தம் என்று பேசும் இவர் பிள்ளைகளின் சண்டையை தீர்க்க வழி தெரியா முண்டம் தமிழனின் சகோதர யுத்தம் பற்றி பேச வந்துவிட்டார்
ஐம்பதாயிரம் ஆங்கிலப்பள்ளி அதிலும் மறை முக வருமானம் தமிழை வளர்க்க சட்டம் இயற்றுவது போல நாடகம் பத்து வரை ஆங்கில கல்வி சட்டம் ஆயினும் இவர் பை பத்தவில்லை என்றால் சட்டம் இருப்பது கிடப்பில்

தமிழா நீ செய்த தவறு என்ன உண்மையான ஒரு தலைவன் இல்லையே உன்னை வழி நடத்த இருப்பவர் அனைவரும் ஆரிய சார்பு அல்லது ஆளும் கட்சி சார்பு என்றே உள்ளனர்

இதுபோல இன்னும் பல குமுறல்
காவல் துறை கருணாநிதி யின் எவதுரை

வாழ்க வழக்குரைஞர் போராட்டம்
வெல்க ஈழம் மற்றும் ஈழ மக்கள் போராட்டம்

arasu said...

what people watched on the TV news are few pictures that could be caught by media persons. The violence of police seems to be preplaned. Innocent Advocates, Judges, Court Staffs, Advocates'clerks, drivers, litigants,General Public, were subjected to barbarous attack. The Police have exceeded their power, deliberately. The brutal attack on head,vital parts and thereby causing bleeding injury, attract offence of attempt to murder. Large nubmer of persons got severe head injury. Large number of cars were damaged with lathis. 19.2.2009 is black day in the history of Chartered High Court of Madras. The Police added one more feather on their cap for the atrocities.
The Nation Human Rights Commission and State Human Rights Commissions have to take suo moto cognizance of the violence.

The injured to be compensated. The offenders to be dismissed from service and punished by court of law.

mayan said...

அதிவிரைவான இலங்கை செய்திகள்

http://www.tamilskynews.com/

sharmi said...

வணக்கம்.,
எங்கே போகிறது நம் தமிழ்நாடு..............
அடிதடி சண்டை...
கலவரம்...
குண்டு வெடிப்பு...
தீவிரவாதிகள்.....

Its not healthy one........

சட்டத்தை காக்க வேண்டிய போலிஸ்,வக்கீல் இருவருமே ......
சொல்வதற்கே வருத்தமாக உள்ளது.

படித்தவர்கள் போலவா நடந்து கொள்கிறார்கள்...
நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம்..........

baby said...

காலம் பார்ப்பானின் பக்கம் இருக்கிறது. அதனால் தான் முகர்ஜி ஆயுதம் அனுப்பி நம் இனத்தை அழிக்கிறான். பெரியார் சொன்னது போல "தமிழன் ஒரு நல்ல பதவியை அடைந்துவிட்டால் தன்னுடைய நலத்திற்காகவும், தன் குடும்ப நலத்திற்க்காகவும் தன் இனத்தாரையே அழித்து தன் பதவியை காப்பாற்றிக்கொள்கிறான்

அன்று பெரியார் சொன்னது உண்மையாகி விட்டது. ஆனால் ஒன்று இன்று தவிக்கும் தமிழனத்தை காப்பாற்ற இன்னொரு பெரியார் வருவார். தமிழ் அத்தகைய தகுதியை பெற்றிருக்கிறது. தனக்கும் தன் இனத்தவர்க்கும் ஆபத்து ஏற்பட்ட போதல்லாம் காப்பாற்றிக்கொள்ள யாரோ ஒருவனை தயார்படுத்திவிடுகிறது. அப்படி ஒரு வரலாறால்தான் இன்று வரை தழைத்தோங்குகிறது.

baby said...

நண்பர்களே தமிழில் தட்டச்சு செய்ய எளிதான வழி கொடுக்கப்பட்டிருக்கும் தொடர்பை க்ளிக் செய்யுங்கள்

http://ezilnila.com/tane/unicode_Writer.htm