Friday, February 20, 2009

காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதல்


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று வழக்குரைஞர்களை ஓட ஓட விரட்டி காவல்துறையினர் தாக்கினர். இந்நிகழ்வை மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சேதுராமன் , ஜோதிமணி ஆகியோர் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் . செய்தியாளர்கள் என்று அடையாள அட்டையை காண்பித்த பிறகும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த செய்தியாளர்கள் இருவரும் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர் .

காவல் துறையினரின் இந்த வெறித்தாக்குதலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மக்கள் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு கருவிகள் அடித்து நொறுக்கப்பட்டன . ஒளிப்பதிவாளர்கள் மீதும் கண்முடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது . மேலும் காவல்துறையினரின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்குரைஞர்களும் படுகாயம் அடைந்தனர் .

Wednesday, February 18, 2009

மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் தடை


மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை , பலவிதமான அமைப்புகளும் பாராட்டியுள்ளன .ஊடக நெறியை மீறாமல் உலகத்தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறோம் .

இந்நிலையில் , இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மை நிலையை விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால் , இலங்கை இராணுவம் மக்கள் தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது .

மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் ராணுவத்தினர் விதித்துள்ள தடை , உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும் , ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி . ஊடக சுதந்ததிரத்தின் குரல் வளையை நெரித்து வரும் இலங்கை அரசின் சர்வதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது .

இலங்கையில் தமிழ்ர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர் . இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி .பி .சி . உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கிகப்பட்டுள்ளது .

இலங்கையில் அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் மக்கள் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் சான்றாகும் .

இலங்கையில் ராணுவ கட்டுபாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குனர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது .

இலங்கை அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும் , சக ஊடகவியளர்களும் , பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்ய வேண்டும் . தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும் , ஊடக நெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் .

மக்கள் தொலைக்காட்சிக்காக ,

அ . சிவகுமார் .

முதன்மை செயல் அலுவலர் .

Sunday, December 7, 2008

ஈழம் - நேற்றும் இன்றும் .டிசம்பர் 15 ,2008 முதல் ..,




ஈழம் - நேற்றும் இன்றும்

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ..


இலங்கை அரசு சொந்த மக்கள் மீதே மும்முனைத் தாக்குதல் நடத்துவது இதுவரை உலகம் காணாத வரலாறு .

இனவெறி வன்வம் எப்போது , எப்படி , எங்கிருந்து தொடங்கியது என்பதை காட்டும் தொடர் ஈழம் -நேற்றும் இன்றும் .

உள்ளைத்தை உலுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது இந்த தொடர் .









Monday, September 15, 2008

தலைவா - ஆகஸ்ட் 22 முதல் ..,


மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நையாண்டித் தொடர் " தலைவா " .

ஆட்டோ சங்கர் , சந்தனகாடு என்ற தொடர்களால் இரவு 8.30 மணியை அதிரவைத்த மக்கள் தொலைக்காட்சி "தலைவா " நிகழ்ச்சியின் மூலம் நேயர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப்போகிறது .

வரும் 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்கும் தலைவா , அரசியலின் அன்றாட நிகழ்வுகளையும் , அரசியல்வாதிகள் அடிக்கடி அடிக்கும் அந்தர் பல்டியையும் அலசும் நிகழ்ச்சிதான் தலைவா .

அரசியல் நையாண்டி இருக்கும் அதே நேரத்தில் யார் மனதையும் புன்படுத்தாத நேர்த்தி இருக்கும் . சிரிப்புத் தொடரான தலைவா , சிரிப்பை தாண்டி அரசியலுக்குள் அதிர்வை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம் .