Sunday, December 7, 2008

ஈழம் - நேற்றும் இன்றும் .டிசம்பர் 15 ,2008 முதல் ..,




ஈழம் - நேற்றும் இன்றும்

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ..


இலங்கை அரசு சொந்த மக்கள் மீதே மும்முனைத் தாக்குதல் நடத்துவது இதுவரை உலகம் காணாத வரலாறு .

இனவெறி வன்வம் எப்போது , எப்படி , எங்கிருந்து தொடங்கியது என்பதை காட்டும் தொடர் ஈழம் -நேற்றும் இன்றும் .

உள்ளைத்தை உலுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது இந்த தொடர் .









17 comments:

பார்வைகள் said...

அன்புள்ள மக்கள் தொலைக்காட்சிக்கு, வணக்கம்,
ஈழம் நேற்றும் இன்றும் தொடர் பார்த்தேன்.விழிகளில் வழிந்த நீரைத் துடைக்க கைகள் எழவில்லை. தொடக்கப் பாடல் நெஞ்சைப் பிழிந்துவிட்டது. புலவர் புலமைபித்தன் கருத்துகள் செழுமைமிக்கது. பழனி பாரதி வாசித்த சேரன் கவிதை கல்மனதையும் கரையவைக்கும்.
நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றில் சிறப்பிடம் பெறும் என்பது திண்ணம்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
ஆசிரியர், தமிழ்த்திணை (www.tamilthinai.com)

RISHI said...

அன்பும் பண்பும் நிறைந்த மக்கள் தொலைக்கட்சிக்கு எனது சார்பாகவும் எனது ஈழத்து உறவுகள் சார்பாகவும் கோடன கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஈழத்து மக்களது துன்ப துயரங்களை இதற்கு மேல் எப்படி உலகத்திற்கு எடுத்துரைப்பது ,எப்படி எங்கள் வலியை உணரவைப்பது என்று புரியாமல் தவித்த எமக்கு தங்கள் தொலைக்காட்சியில் "ஈழம் - நேற்றும் இன்றும்" என்ற தொடர் ஒளிபரப்பாவது கண்டு நமக்கு மிண்டும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன் நிகழ்சியின் ஆரம்ப பாடலை கேட்கும் போதே , பார்க்கும் போதே ஈழத்து மக்களின் வலிகளை உணரமுடிகிறது. இன் நிகழ்சியை இணையத்தளம் முலமாக உலகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். எனவே இன் நிகழ்சியின் ஒவரு பகுதிகளையும் இணையத்தில் பதிவேற்றம் செயுங்கள் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்... இன் நிகழ்சி மேலும் சிறப்பாக அமைய எங்களுடைய வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் .

LakshmanaRaja said...

மிக முக்கியமான பணி ஒன்றை எடுத்து நடத்தும் உமக்கு எம் 100 கோடி நன்றிகள்
நிகழ்சியை எம்மால் இயன்ற அளவிற்கு பிறருக்கு இந்த நிகழ்வைப்பற்றி தெரிவிக்கி்றேன்.
தொடர்ந்து செய்யுங்கள்.
மக்கள் எழுச்சி பெறட்டும் பின் வெளியுறவுத்துறை நம் சொல்லைக்கேட்கும்.

Unknown said...

மக்கள் தொலைக்காட்சி, தமிழ் நாடு அரசு, பிற நிறுவனங்கள் பயன்படுத்து தமிழ்ச் சொற்களில் சில முரண்பாடுகள் உள்ளன.

தமிழ் நாடு அரசு புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு "காப்புரிமை" எனப்படும் சொல்லைப் பயன்படுத்துவர். நூல், திரைப்படம் ஆகியப் படைப்புகளை "பதிப்புரிமை" எனப்படும் சொல்லைப் பயன்படுத்துவர். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கும் காப்புரிமை எனப்படும் சொல்லையே பயன்படுத்துகின்றன. ஆனால் மக்கள் தொலைக்காட்சியிலேயே வந்த ஒரு அறிவியல் நிகழ்ச்சியில் இதே சொல் "இக்கண்டுப்பிடிப்புக்குக் காப்புரிமைப் பெற்றார்" என வாசகமும் இடம்பெற்றது.

இதே போல் நிறைய தமிழக அரசு ஆவணங்களில் Van எனப்படும் சொல்லிற்கு "கூடுந்து" எனப்படும் சொல் அளிக்கப்படுகிறது. மக்கள் தொலைக்காட்சியில் இதே சொல்லிற்கு "மூடுந்து" எனவே அழைக்கப்படுகிறது.

தமிழாக்கத்தின் உள்நோக்கத்தை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். ஆமால் இத்தகைய முரண்பாடான சொல் புழக்கத்தால் யாருக்கு என்னப் பயன். தமிழைத் தூயமாகப் பயன்படுத்த விரும்புவோரும் ஒரேப் பொருளுக்குப் பல பல சொற்களைக் கேட்டு குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.

Unknown said...

அன்பும் பண்பும் நிறைந்த மக்கள் தொலைக்கட்சிக்கு எனது சார்பாகவும் எனது ஈழத்து உறவுகள் சார்பாகவும் கோடன கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஈழத்து மக்களது துன்ப துயரங்களை இதற்கு மேல் எப்படி உலகத்திற்கு எடுத்துரைப்பது ,எப்படி எங்கள் வலியை உணரவைப்பது என்று புரியாமல் தவித்த எமக்கு தங்கள் தொலைக்காட்சியில் "ஈழம் - நேற்றும் இன்றும்" என்ற தொடர் ஒளிபரப்பாவது கண்டு நமக்கு மிண்டும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன் நிகழ்சியின் ஆரம்ப பாடலை கேட்கும் போதே , பார்க்கும் போதே ஈழத்து மக்களின் வலிகளை உணரமுடிகிறது. இன் நிகழ்சியை இணையத்தளம் முலமாக உலகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். எனவே இன் நிகழ்சியின் ஒவரு பகுதிகளையும் இணையத்தில் பதிவேற்றம் செயுங்கள் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்... இன் நிகழ்சி மேலும் சிறப்பாக அமைய எங்களுடைய வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் .

சோழன் கொடி said...

இரும்பை கூட இளக வைக்கும் இ ந் நிகழ்ச்சியின் இப்பாடலுக்குக்கும், இசை அமைத்தவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இப்பாடல் காட்சியின் போது வரும் ஒரு குழந்தையின் காயப்பட்ட முகம் நெஞ்சை வெடிக்க வைக்கிறது. ஏ இறைவா! இந்த இனம் செய்த குற்றம்தான் என்ன? வந்தாரையெல்லாம் வாழ் வைத்தது குற்றமா? கல் மணம் கொண்ட காங்கரஸ்காரர்களே என் சகோதரன் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதவி ஆசையும் பண ஆசையும் கொண்ட நீங்கள் பதில் சொல்லித்தான் தீர வேண்டும். ராஜ பக்சேயின் கைகூலிகளாக இருக்கும் பார்ப்பான்களுக்கு இன்னொரு பெரியார் வருவார். உங்கள் கொட்டத்தை கூண்டோடு ஒழிப்பார்.

Jeba said...

how can i get that song? I need it.

Jabaraj

Unknown said...

eelam tittle vidio or auido song please send my e mail mgkumaravel_20@yahoo.com

Arunan Chandrasekaran said...

Hai All,
Just because i cannot type in Tamil I am writing my blog in English.Sorry for that. But my Vision is only good for tamils.

Today I have seen "Eealam Netrum indrum". First i should thank MAKKAL TV for its sincere effort to make the history of tamils at srilanka.

This will reach the hearts of the heartless also.

Further, inspite of the protest which was shown by tamil people at tamilnadu,NOTHING HAPPEND TILL NOW.

Why?

Because our leaders are like that. we have choosen such a leaders to rule us. WE SHOULD REPEND FOR OUR ACT.

When some other tv networks portray that they are the guards of tamils, had done no effort to make the history. All are really eating the tamils.

Only 3 months are left for the central government to rule but no party which participates in the central ministry was interested in resigning thier minister post held.

All are because they are in thurst of power. They didnot form the party for the upliftment of people,
it is for thier personal upliftment.

The citizens of Tamilnadu can understand thier true face from this act.

At present i really pray god for the good peacefull life at srilanka for tamils and also i wish to have another periyar who can make these political pigs to run from tamilnadu.

What explanation will rajapakse will give for the jaffna library set ablaze on 1981.

Will he give all the books that were burnt?

It is sheer stupidity to say the people are terrorist. Only thing they need to understand is Jayawardhane is the only real stupid and idiot.

I am really sad to hear that somewhere from US a female with ENGLISH race Madam Hilary clinton calls for ending the war But our leaders had not got the courage to say so. Let our leaders gets such a courage and then come to politics and rule tamilnadu

Vande matharam

Unknown said...

small request to makkal tv please repeat the program of ezham netrum indrum. I miss that program so telecastit suotable time thanks

sangeeth said...

நான் இலங்கயில் இருந்து சங்கீத் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இலங்கை தமிழர்களை கவர்ந்து விட்டன இப்போது எங்கு பார்த்தாலும் மக்கள் தொலைக்காட்சியை பற்றித்தான் இங்கு பேச்சு
தமிழ் வளர்க்க அதன் பெருமையை உலகிற்கு கொண்டு செல்ல மற்றும் தமிழின் அடையாளமாக விளங்கும் மக்கள் தொலை காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம் நேற்றும் இன்றும் நிகழ்ச்சி வெகுவாக எங்களை கவர்ந்துள்ளது ஈழ மக்கள் படும் கொடுமையை அப்பட்டமாக உலகிற்கு கொண்டு வரும் உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் இந்நிகழ்ச்சி எங்கள் உள்ளங்களை தட்டி எழுப்புகிறது, இன்நிகழ்ச்சியின் வரவேற்பு பாடலின் ப்ரதி ஐ எவ்வாறு பெறுவது தயவு செய்து உங்கள் இணையத்தில் முகப்பில் அதனை பிரதி செய்யுங்கள்
நன்றி வாழ்க தமிழ் வளர்க அதன் பெருமை உலகெலாம்

தமிழ். சரவணன் said...

நடுநிலையான தொலைக்காட்சி நிறுவனம் வாழ்த்துக்கள் தங்கள் சேவைக்கு

சோழன் கொடி said...

கலைஞரின் ஒரு பேட்டியில் புலிகளின் தலைவரை பற்றிக் கூறும் போது " பிரபாகரன் ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் ஈழம் அமைந்த பிறகு மக்களாட்சி அமையுமா என்ற கேள்விக்கு சர்வாதிகார ஆட்சி அமையும் என்று சொன்னார். அப்போதே எனக்கு புளித்துவிட்டது" என்று கூறியிருக்கிறார்.

கலைஞர் அவர்களே நீங்கள் அளித்த ஒரு நேர்காணலில் "உலகத் தலைவர்களில் உங்களுக்கு யார் பிடிக்கும் என்ற கேள்விக்கு எனக்கு க்யூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவைத்தான் பிடிக்கும் என்று சொன்னீர்கள்"

பிடல் காஸ்ட்ரோ என்ன மக்களாட்சியா நடத்துகிறார்? போரில் வெற்றியடைந்து ஆட்சி கைப்பற்றியதிலிருந்து இதுவரை சர்வாதிகாரம்தானே நடக்கிறது. அவரை மட்டும் உங்களூக்கு எப்படி பிடித்தது? பிரபாகரனை எப்படி பிடிக்காமல் போனது?


இதிலிருந்து நீங்கள் நடிக்கிறீர்கள் என்று தெரிகிறது. காஸ்ட்ரோவை பிடிக்கும் என்றது நடிப்பா? பிரபாகரனை பிடிக்கவில்லை என்றது நடிப்பா? அல்லது இரண்டுமே காலத்திற்கு தகுந்த, உங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான நடிப்பா?

MYMIX RESOLUTION PRINTING said...

i think makkal tv did a great job compare all the other internation tv. The latest news about sri lanka comes from this tv, fully updated. I think thw world tamil people should not stop the voice until all of us have our own elam in sri lanka. Rajapaksa should face the law like what happen to saddam hussien. But what is suprising the world is just watching (amerika and united nation). if there is no solution, this war will never end. 100 of perebakaran will come in future.
we tamil people around the should support for our people LTTE who sacrifice their life for tamils.

Unknown said...

Thanks to MAKKAL TV ,
Now a days most of the medias
focus on profit and gain , but like MAKKAL , each and every programs was most helpful to all kind of peoples , From my heart i am telling for srilangan tamilan`s
This chennal doing very good jobs
i am requsting to all of my brothers and sisters pls spend few mints for this chennal . Iam really proud of tamilan and fan of MAKKAL TV ,

ஜோதிஜி said...

திரு அன்புமணி ராமதாஸ் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் அவர்களுக்கு


நல்ல தொல்லை இல்லாத காட்சிகளாக தந்து கொண்டுருக்கும் உங்கள் தொலைக்காட்சி போல்

உங்கள் வலை தளத்தை சிறப்பாக சிந்தனையில் வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.


எழுத்துரு அனைவருக்கும் பொருத்தமானதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


உங்கள் தமிழ் மற்றும் உலகத் தமிழர்களின் மேல் கொண்டுள்ள உண்மையான அக்கறைக்கு தேவியர் இல்ல பூங்கொத்து.


இந்த பதிவை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

http://texlords.wordpress.com/2009/07/27/மக்கள்-தொலைக்காட்சி-என்/



texlords@aol.in

நட்புடன்


ஜோதிஜி

தேவியர் இல்லம்.

திருப்பூர்.

ஜோதிஜி said...

விளம்பரம் வியாபாரிகளுக்கு மட்டுமே , வீரனுக்கு அல்ல?



புறமுதுகிட்டு ஓடச் செய்தாய்

பூரித்துப் போனேன்.

பொழுது புலர்ந்து விடும் உன்

புதுமை நிர்வாகம் உலகறியச் செய்யும்.




காத்திருந்த கணங்கள்

அனைத்தும்

தொடர்கதையாகி

விடுகதையையும் சேர்த்து

விட்டுச்சென்றுள்ளது?


திசையெல்லாம்

கூடிய ஆதரவில்

திசை திரும்பாமலே

பயணித்தாய்.


சேர, சோழ, பாண்டிய

கதைகள்

பழங்கதையாகி

தேசமெங்கும்

தேசியத் தலைவரானாய்.


நல்லவரா? கெட்டவரா?

நாள்தோறும்

முண்டியத்த

நாக்குகளுக்கு மட்டுமே

தெரிந்ததால்

நகைப்பாய், நகைச்சுவையாய்

நாள்தோறும்

தலைப்புச் செய்தியானாய்?


உன் ஓழுக்கம் குறித்து இங்கு

அக்கறையில்லை.

ஊடக விற்பனையில் நீ

உரத்துச் சொன்ன

அத்தனையும்

உலகறியாது?




உதிரம் கொடுத்து

உள்ளே புதைந்தவர்கள்

உறவை விடுத்து

உணர்வாய் கலந்தவர்கள்

அந்தரத்தில் மிதக்கும் அந்த

ஆத்மாக்கள் சொல்லும்

ஒரு நாள்.


நீயே இல்லாவிட்டாலும்.


புழுத்துப் போன வசைபாடுகள் உன்

திசைகளை மாற்றிக்கொண்டேயிருந்தது.




வந்தவர், போனவர்

பார்த்தவர், பார்க்காதவர்

அத்தனையும்

கட்டுரையாய் அச்சில் வர

அச்சமே வந்தது.






தன்னை நிறுத்த நீ

விதைத்த விதையை

வினையாக்கி விட்டார்கள்.


அறுப்பவர் யாருமின்றி இன்று

அனைவரையும் அனாதையாக்கி

முள்கம்பிகளை மட்டுமே

உறவாக்கிவிட்டுள்ளது.




உண்மைக்கும் உன்

ஒழுக்கத்திற்கும்

ஒரு நாள் செய்தி வரும்.


உலகம் பார்க்க விரும்பும்

மாவீரன் தினமாக,