Monday, October 10, 2011

“சாதிக்கலாம் வாங்க”



பதினெண் பருவம் எனப்படும் இந்த பதினைந்து வயதில் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் விதைக்கப்படும் விதைதான் அவனது எதிர்கால வாழ்க்கை நிர்ணயிக்கும் கருவியாக அமைகிறது. அந்த கருவியை இயக்க ஒரு தூண்டல் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் சாதிக்கவேண்டும் என்ற விதையை விதைத்து அந்த விதையை தூண்டிவிடும் வேலையைத்தான் மக்கள் தொலைக்காட்சி தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

சாதிக்கணும் நினைப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், நாம்மால் சாதிக்கமுடியுமா? என நினைப்பவர்களுக்குமான நிகழ்ச்சிதான் “சாதிக்கலாம் வாங்க”. பொதுவாக தொலைக்காட்சி என்றாலே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்குவது என்று அல்லாமல் கல்வியையும் தொலைக்காட்சி வழியாக கொடுக்கமுடியும் என நிருபித்திருக்கிறது இந்த நிகழ்ச்சி....

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒரு கடினமான விஷயமே அல்ல என மாணவர்களுக்கு புரியவைத்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பாடப்பிரிவை எடுத்து அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் என அவர்களுக்கு எளிமையான முறையில் சொல்லிக்கொடுத்து, நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த ஐந்து நாட்களில் எவையேனும் ஒன்றை காண தவறவிடும் மாணவர்கள், இந்த ஐந்து நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் தொகுப்பு மற்றும் மறுஆய்வு உங்களுக்காக சனிக்கிழமையன்று ஒளிபரப்படுகிறது. கூடுதலாக பிற மொழி பயிற்சி, தொழிற்கல்வி என மாணவர்களுக்கு பயனுள்ள விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

“சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுதமுடியும்” என்ற பழமொழிக்கேற்ப ஞாயிறு அன்று மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க, மனநிலை சீராக செயல்பட அவர்களுக்கு மனவளக்கலை என்ற பகுதியும் கொண்டுள்ளது. இதில் உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் மாணவர்கள் மனபலம் பெறுவது மட்டுமல்லாமல் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற இந்த பகுதி உறுதுணையாக இருக்கும்.

ஆகமொத்தம் வாரத்தின் ஏழு நாட்களும் மக்கள் தொலைக்காட்சியியில் “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் அக்டோபர் 5ம் தேதி முதல் காலை 6:30மணிக்கு ஒளிபரப்பாகிறது. மாணவச் செல்வங்களே இது முற்றிலும் உங்களுக்கான நிகழ்ச்சி காணத்தவறாதீர்....


1 comment:

Diwakaran Sudalaimani said...

அருமை... வாழ்த்துக்கள்