Wednesday, July 4, 2012

குழந்தைகள் பாராளுமன்றம்

மக்கள் தொலைக்காட்சி நேயர்களின் மகத்தான ஆதரவோடு அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்த அரங்கேறவிருக்கிறது ஓர் மாபெரும் நிகழ்வு... இது இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் எழுச்சியோடு தாங்கி நிற்கும் பாராளுமன்றம். குறையில்லா நாட்டினைப் படைக்க குன்றாத முயற்சியோடு குரலெழுப்பும் குழந்தைகள் பாராளுமன்றம்.

இங்கு
மாணவச் செல்வங்களே மாண்புமிகுக்களாக... மக்களவைத் தலைவராக...

ஏடும் எழுதுகோலும் ஏந்தி நின்றவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக...

பிழை செய்தறியாத பிள்ளை நிலாக்கள் பிரச்சினைக்குத் தீர்வளிக்கும் பிரதமராக...

நாட்டுக்கு நல்லறிவுரையை அள்ளித் தரும் இப்பாராளுமன்றத்தில் உமது பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்க வேண்டுமா?

மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் மாண்புமிகுக்களாக மலர வேண்டுமா?

உமது பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ. மாணவியர்களில் ஆர்வமும் திறமையும் உள்ளோரைத் தேர்வு செய்து அவர்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்புகளை புகைப்படத்துடன் எங்களுக்கு அனுப்புங்கள்...

பார் போற்றும் குழந்தைகள் பாராளுமன்றத்தில் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க நாங்கள் வாய்ப்பளிக்கிறோம்... இது தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகேடில்லாத தேர்தல்...

மக்களாட்சியின் மாண்பினைப் பதிவு செய்யும் மக்கள் தொலைக்காட்சியின் மாறுபட்ட முயற்சி...

1 comment:

Unknown said...

பள்ளியில் பாராளுமன்றம் .என்கிற தொடரை நீங்கள் முன் எடுத்தால் அது மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் .

நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது இந்த நடைமையுரை இருந்தது ஒவ்ஒரு வெள்ளிகிழமையும் மன்றம் கூடி அந்த வார நிகழ்வுகளை விவாதிக்கும் .

பாராளுமன்றம் இருப்பதுபோல் அணைத்து துறைகளுக்கும் அமைச்சர்கள் நிமிக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக பள்ளி பராமகிக்கப்பட்டு வந்தது .
மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் அமைச்சர்கள் பதில் அளிக்கவேண்டும் .
இதனால் பள்ளி சுத்தமாக வைக்கப்படும் , விளையாட்டு துறை ,விவசாயம் ,சத்துணவு என அனைத்து துறைகளும் கண்காணிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது .
ஒவ்ஒரு மதமும் , அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்படும் .
இதனால் அனைவருக்கும் அரசியல் அறிவை பள்ளியிலே புகுத்தமுடியும் .
இதை நீங்கள் ஒவ்ஒரு பள்ளியாக முன்னெடுக்கலாம் .